சிமெண்ட் விலையை குறைப்பது குறித்து ஜனவரி 10ஆம் தேதிக்குள் மற்ற தனியார் சிமெண்ட் ஆலை அதிபர்களை கூட்டி அவர்களுடன் பேசி விட்டு நல்லதோர் முடிவுடன் முதலமைச்சரை சந்திப்பதாக இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் அதிபர் சீனிவாசன் கூறிச் சென்றுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிமெண்ட் விலையைக் குறைப்பது குறித்து தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இன்று காலையில் தனியார் சிமெண்ட் ஆலை அதிபர்களின் சார்பில் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் அதிபர் என்.சீனிவாசன் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
ஜனவரி 10ஆம் தேதிக்குள் மற்ற தனியார் சிமெண்ட் ஆலை அதிபர்களை கூட்டி அவர்களுடன் பேசி விட்டு நல்லதோர் முடிவுடன் முதலமைச்சரை சந்திப்பதாக கூறிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.