தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கு: தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உய‌ர் ‌நீ‌தி‌ம‌ன்ற‌த்த‌ி‌ல் 3 அ.இ.அ.தி.மு.க.வினர் மனு!

Webdunia

வியாழன், 3 ஜனவரி 2008 (09:51 IST)
உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அப்பீல் செய்திருப்பதால் ஜனவ‌ரி 10ஆ‌ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி 3 அ.இ.அ.தி.மு.க.வினர் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செய்துள்ளனர்.

தர்மபுரியில் பேரு‌ந்துக்கு தீ வைக்கப்பட்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சேலம் முத‌ன்மை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ம் அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு ‌சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 28 பேரும் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அப்பீல் செய்தனர். இ‌ந்த மனுவை நீதிபதிகள் பி.முருகேசன், வி.பெரியகருப்பையா ஆகியோர் ‌விசா‌ரி‌த்து சே‌ல‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ம் விதி‌த்த தண்டனையை உறுதி செய்து கடந்த மாதம் டிச‌ம்ப‌ர் 6ஆ‌ம் தேதி தீர்ப்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சேலம் முதன்மை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ம், கோவை ஜெயிலருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அ‌தி‌ல், தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேரையும் ஜனவரி 10ஆ‌ம் தேதி தூக்கிலிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி 3 பேரும் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் அப்பீல் செய்துள்ளனர். ‌‌ிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தில‌் அப்பீல் செய்திருப்பதால் தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி 3 பேரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (3ஆ‌ம் தே‌தி) விசாரணைக்கு வரும் என்று தெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்