சென்னையில் மூடு பனி : விமான, ரயில் சேவைகள் பாதிப்பு

ஞாயிறு, 23 டிசம்பர் 2007 (11:28 IST)
சென்னையில் இன்று காலை 7 மணி வரை நிலவிய மூடுபனியால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் தாமதமானது மட்டுமின்றி, சென்னைக்கு வந்திறங்க வேண்டிய விமானங்களும் பெங்களூர்-ஹைதராபாத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

இன்று காலை சார்ஜா, கட்டார், மஸ்கட், துபாய் நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

அந்தமான், டெல்லி, கொல்கட்டா, மும்பை, மதுரை செல்ல வேண்டிய உள்ளூர் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

இந்த விமானத்தில் சக்தி வாய்ந்த விளக்குகள் இருந்தும் ஓடுதளத்தில் 50 மீட்டருக்கு மேல் வெளிச்சம் பரவவில்லை. இதனால் விமான புறப்பாடு, வருகை பாதிக்கப்பட்டதாக விமான இயக்ககம் கூறியுள்ளது.

இதேப்போல சென்னைக்கு வர வேண்டிய ரயில்களும், புறப்பட வேண்டிய விரைவு ரயில்களும் தாமதிக்கப்பட்டன. நீண்ட தூர ரயில்கள் மட்டுமின்றி புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் காலை 7 மணி வரை ஓடியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்