பகு‌திநேர‌த் தொ‌ழிலாக‌ க‌ட்‌சி தொட‌ங்கு‌கிறா‌ர்க‌ள்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

Webdunia

ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (15:46 IST)
'சிலர் தங்களை அடையாளம் காட்டி கொள்வதற்காக அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். இதை அவர்கள் பகுதி நேர தொழிலாக கொண்டுள்ளனர்' எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி உ‌‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் ‌தி.மு.க. இளைஞர‌ணி‌யி‌ன் மா‌நில மாநா‌ட்டி‌ல் இ‌ன்று அவ‌ர் பேசுகை‌யி‌ல், "தத்துவார்த்த சிந்தனைகளை ஏற்படுத்தி புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்க 1980-ஆம் ஆண்டு மதுரை ஜா‌ன்சி ராணி பூங்காவில் தொடங்கப்பட்ட இந்த இளைஞர் அணி இன்று தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி சிறப்பு செய்துள்ளது.

திடீர், திடீரென கட்சிகள் வருகி‌ன்றன. பல புதிய தலைவர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்து விட்டு போகட்டும். லட்சியம், குறிக்கோள் அற்ற கட்சிகளாகவே அவைகள் உள்ளன. நம் தி.மு.க.வோ 1949-இல் தொடங்கப்பட்டு 1957-இல் முதல் தேர்தலை சந்தித்து வளர்ச்சி பெற்றுள்ளது.

அதுவும் முதல் தேர்தல் களத்தில் போட்டியிட கட்சி தலைவராகிய அண்ணாவோ, நம் தலைவர் கலைஞரோ, பேராசிரியர் அன்பழகனோ மற்றும் முன்னோடிகளோ முடிவெடுக்கவில்லை. திருச்சி‌யி‌ல் நட‌ந்த முதல் மாநாட்டில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு பெட்டிகள் அமைத்து தேர்தல் களத்தில் நிற்க முடிவெடுக்கப்பட்டது.

இது பொதுமக்கள் நமக்கு அளித்த வாய்ப்பு. அதன்படியே நாம் திறம்பட செயலாற்றி சேவை புரிந்து வருகிறோம். ஆனால் தற்போது சிலர் தங்களை அடையாளம் காட்டி கொள்வதற்காக அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். இதை அவர்கள் பகுதி நேர தொழிலாக கொண்டுள்ளனர்.

இந்த மாநாடு மற்ற புதிய அரசியல் தலைவர்களை கிண்டல் செய்வதற்காக நடத்தவில்லை. லட்சியம், குறிக்கோளுக்காக நடத்தப்படுகிறது.

அப்படி லட்சியத்தோடு இருக்கும் கட்சியாக தி.மு.க. இருப்பதினாலே உயிரோடு இருக்கிறது. தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதற்கு பின் பல புதிய கட்சிகள் தொடங்கப்பட்டு மாண்டு விட்டன. அந்த கட்சிகளை தொடங்கிய தலைவர்களோ அடையாளம் காணாமல் போய் விட்டனர்" எ‌ன்றா‌ர் ‌ஸ்டா‌லி‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்