நரேந்திர மோடி மலத்தை அ‌ள்‌ளி யோ‌கியாகலாமே: திருமாவளவன் தா‌க்கு!

Webdunia

வெள்ளி, 30 நவம்பர் 2007 (13:11 IST)
''மலம் அள்ளுவது புனிதமானது என்று‌ம் அத்தொழிலில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள் என்றால் நரேந்திர மோடியும், அவரது கும்பலும் மனித மலத்தை அள்ளி யோகிகள் ஆகலாமே'' எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மனுநீதி, மதவெறியை வலியுறுத்தி கர்மயோக் என்கிற பெயரில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூலை அரசு செலவிலேயே குஜராத் அரசு வெளியிட்டுள்ளது.

அந்நூலில் மலம் அள்ளுவது, சாக்கடைகளையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவது புனிதமானது என்றும் அத்தகைய பணிகளில் ஈடுபடுவோர் `யோக நிலையை' அடைவார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விஞ்ஞான யுகத்தில் அனைத்து தளங்களிலும் புதிய உயரிய தொழிற் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. ஆனால் நம்நாட்டில் மட்டும்தான் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடிக்கிறது.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி மனுநீதி கருத்துக்களை உயர்த்தி பிடிப்பதுடன், வெளிப்படையாக ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரராகவே செயல்பட்டு வருகிறார். `மலம் அள்ளுவது புனிதமானது' என்ற அத்தொழிலில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள் என்றால் நரேந்திர மோடியும், அவரது கும்பலும் மனித மலத்தை அள்ளி யோகிகள் மாறலாமே! மலம் அள்ளும் இழிதொழிலை நியாயப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தனது கருத்தை திரும்ப பெறுவதுடன் வால்மீகி உள்ளிட்ட தலித் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று விடுதலை சிறுத்தை வலியுறுத்துகிறது. இல்லையேல் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் எ‌ன்று தொ‌ல்.‌திருமாவளவ‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்