ஜனவரி 1ஆ‌ம் தேதி முத‌ல் திருப்பூர், ஈரோடு மாநகராட்சி ஆகிறது: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia

வெள்ளி, 30 நவம்பர் 2007 (09:37 IST)
ஜனவ‌‌ரி 1ஆ‌ம் தே‌தி‌யி‌ல் இரு‌ந்து திருப்பூர், ஈரோடு ஆ‌கிய நகரா‌ட்‌சிக‌ள் மாநகரா‌ட்‌சியாக தர‌ம் உய‌ர்‌த்த‌ப்படு‌கிறது. இதற்கான அ‌‌திகார‌ப்பூ‌ர்வ அறிவிப்பு நேற்று தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்படடது.

தமிழக‌த்‌தி‌ல் இப்போது சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரசபைகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்தன. இதையடுத்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, திருப்பூர், ஈரோடு நகரசபைகள் மாநகராட்சிகளாக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், புத்தாண்டான ஜனவ‌‌ரி 1‌ஆ‌ம் தே‌தி திருப்பூர், ஈரோடு நகரா‌‌‌ட்‌சிக‌ள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தமிழக அரசு நேற்று அரசிதழ் (கெஜட்) ஒன்றை வெளியிட்டது. அதி‌ல், திருப்பூர், ஈரோடு ஆ‌கிய நகராட்சிகளை மாநகராட்சி ஆக்குவதற்கான அவசர சட்டம் ஜனவரி 1ஆ‌ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்