சிறப்பு குற்றப்பிரிவு புலனாய்வு வீடியோ தடுப்பு பிரிவு தலைமை துணை ஆய்வாளர் ஆறுமுகம் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. மாணவ- மாணவிகள் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க 12 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் தடையை மீறி செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள். கேமிரா செல்போனில் ஆபாச படங்களை பகிர்ந்து கொள்பவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
சென்னையில் இருந்து அயலூர் செல்லும் பேருந்துகளில் புதுப்படங்கள் ஒளிபரப்பப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப் பூர்வமாக புகார் வந்தால் புதுப்படங்கள் ஒளிபரப்பப்படும் பேருந்துகளின் நடத்துனர், ஓட்டுனர் கைது செய்யப்படுவார்கள். இந்த ஆண்டு இதுவரை ரூ.17 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 1 லட்சம் சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1,673 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர் என்று சிறப்பு குற்றப்பிரிவு புலனாய்வு வீடியோ தடுப்பு பிரிவு தலைமை துணை ஆய்வாளர் ஆறுமுகம் கூறினார்.