தமிழக‌த்‌தி‌ல் 2 நாட்கள் மழை பெய்யும்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Webdunia

ஞாயிறு, 18 நவம்பர் 2007 (15:41 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள கடலோர பகு‌திக‌ளி‌ல் இர‌ண்டு நா‌ட்களு‌க்கு ஆ‌ங்கா‌ங்கே மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

2 நாட்களுக்கு மு‌ன்பு வ‌ங்க கட‌லி‌ல் உருவான அதி பய‌ங்கர புயல் 'சிதர்' நேற்று முன்தினம் வங்காளதேசத்தில் கரையை கடந்தது. அ‌ப்போது ஏ‌ற்ப‌‌‌ட்ட பய‌ங்கர புயலா‌ல் 2,000க்கும் மேற்பட்டோர் பலியா‌யின‌ர். வங்கதேசத்தை அ‌திர வை‌த்த இந்த புயல் வலு‌ இழந்த நிலையில் இருந்தாலும் அதனால் உருவான ஈரப்பதம், மேக கூட்டங்கள் ஆங்காங்கே வழி மண்டல மேல் அடுக்கில் சுழற்சியாக உள்ளது.

வங்கக்கடலில் இலங்கைக்கு மேலேயும் இந்த ஈரப்பத சுழற்சி அதிகம் காணப்படுகிறது. இது அப்படியே நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது.

பருவ மழை காலத்தில் வழி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது. ஆங்காங்கே லேசான மழை பெய்தது.

இதுபற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், வழி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் வடகிழக்கு காற்று காரணமாகவும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும். சென்னையிலும் இந்த மழை நீடிக்கும். நாளை (19ஆ‌ம் தே‌தி) ஓரிரு இடங்களில் பலத்த மழை வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்