பட்டாசு ‌‌விப‌த்து: 5 வீடுகள் சாம்பல்!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (12:56 IST)
தீபாவ‌ளியையொ‌ட்டி ப‌ட்டாசு வெடி‌த்த போது அதிலிருந்து சிதறிய ‌‌தீப்‌பிழம்பு குடிசை ‌வீடுக‌ளி‌ல் ‌விழு‌ந்தது. இதி‌ல் 5 ‌‌வீடுக‌ள் எ‌ரி‌ந்து சா‌ம்பலா‌‌யின.

தீபாவளி ப‌ண்டிகையையொ‌ட்டி கடந்த இரண‌்டு நாட்களாக செ‌ன்னை நகரமே ப‌ட்டாசு வெடி‌‌‌ப்‌பி‌ல் அ‌தி‌ர்‌ந்தது. சாலைக‌ளி‌ல் ம‌க்க‌ள் ப‌ட்டாசுகளை வெடி‌த்தன‌ர். இதனா‌‌ல் சாலைக‌ளி‌ல் நட‌ந்து செ‌ல்பவர்கள் கடு‌ம் அ‌‌ச்ச‌த்தி‌ற்கு ஆளானா‌ர்க‌ள். இதில் புரசைவாக்கம், அண்ணாநகர், அடையார், ப‌ட்டின‌‌ப்பா‌க்க‌ம், ஆழ்வார்பேட்டை, சாந்தோம், வண்ணாரப்பேட்டை, கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி உள்பட பல பகுதிகளில் ராக்கெட் வெடி அதிகமாக வெடிக்கப்பட்டது.

பட்டாசு வெடித்ததில் வீட்டின் மாடியில் போடப்பட்டிருந்த கொட்டகைகள், குடிசை வீடுகள் மீது ராக்கெட் வெடி விழுந்ததில் கூரை தீப்பிடித்துக்கொண்டது. ஈக்காட்டுத் தாங்கலில் தொடர்ந்து ராக்கெட் வெடி வந்து விழுந்ததில் அங்குள்ள பார்த்தசாரதி கோவில் தெருவில் 5 வீடுகள் ஒரே சமயத்தில் தீப்பிடித்தது.

உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவ‌ல் கொடு‌க்க‌ப்ப‌ட்டது. அசோக்நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வ‌ந்தன‌ர். ஆனா‌ல் அவ‌ர்க‌ள் வருவத‌ற்கு‌ள் குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.

இதே போல் சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 63 இடங்களில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் பெரிய அளவில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆங்காங்கே சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்‌டிருக்கலாம் என காவ‌‌‌ல்துறை‌யின‌ர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்