சேது பாலத்தில் மனிதர்கள் சென்றதற்கான ஆதாரமே இல்லை: தமிழக உயர்கல்விக்குழு அதிகாரி தகவ‌ல்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (12:34 IST)
சேது சமுத்திரம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் ஆதம் பாலம் தானாக உருவானதுதான்; அதில் மனிதர்கள் நடந்து சென்றதற்கான ஆதாரமே இல்லை என்று வரலாறு பேராசிரியரும், தமிழக உயர் கல்விக்குழுத் துணைத் தலைவருமான ஏ.ராமசாமி கூறினார்.

ஆதம் பாலம் ப‌ற்‌றி ஆரா‌ய்‌ந்ததமிழ்நாடு உயர் கல்விக்குழு துணைத் தலைவரும், வரலாற்று துறையில் டாக்டர் பட்டம் பெற்றவருமான ஏ.ராமசாமி ஒரு தொகுப்பினை தயாரித்துள்ளார். அது குறித்து சென்னையில் அவர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌மகூறுகை‌யி‌ல், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதற்காகத்தான் இது பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தோம். ஆதம் பாலம் என்ற ஒன்று எப்படி உருவானது; அது இருந்ததா? அந்த பாலம் ராமருடன் சென்றதாகக் கூறப்படும் வானர சேனையால் கட்டப்பட்டதா என்ற கோணத்தில் இந்த ஆய்வு மேற்கொண்டோம்.

ராமாயணம் 17 1/2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால், ராமாயணம் நடந்த இடமாகக் கூறப்படும் அயோத்தியில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கவில்லை; அங்கு வெறும் காடுகளே இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.

3 கர்நாடக போர்கள் நிகழ்ந்ததற்குப் பிறகு, 1763-ஆம் ஆண்டில், ராபட் பாக் என்ற கவர்னர் பதவியில் இருந்தார். அவர் காலத்தில் ஆதம் பாலம் சர்ச்சை தொடங்கியது. அப்போது லெப்டினன்ட் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்ற ராணுவ என்ஜி‌னியர் ஒருவரை, தனுஷ்கோடி- தலைமன்னாரை இணைக்கும் ஆதம் பாலம் எனப்படும் மணல் திட்டுக்களை பற்றி ஆய்ந்து வருமாறு பாக் உத்தரவிட்டார்.

அந்த ஆளுநரின் பெயராலேயே பாக் ஜலசந்தி என்ற அப்பகுதி அழைக்கப்படுகிறது. அதுபோல், ஆங்கிலேய குழுவில் இருந்த ஆதம் என்ற ஆராய்ச்சியாளரின் பெயரால் ஆதம் பாலம் என்று அது அழைக்கப்பட்டிருக்கக்கூடும். இதுதான் விஞ்ஞானரீதியாக அங்கு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு ஆகும்.

இலங்கையையும், இந்தியாவையும் இணைப்பது போல் இப்பாலம் உள்ளதால், `ஆதம்' பாலம் என்று பெயரிட்டு இருக்கலாம் என்று ஐதராபாத்தில் உள்ள மத்திய தொலையுணர்வு ஆய்வு நிறுவன அதிகாரி பெருமாள் கூறுகிறார். ஆதம் பாலம் என்பது மணல் திட்டுகளால் ஆன ஒன்று. அது உருவாகும், பிறகு மறையும். அது நிரந்தரமானது அல்ல. அந்த காலத்தில் இலங்கையில் இருந்தும், இங்கிருந்தும் மன்னர்கள் கப்பலில்தான் இருநாடுகளுக்கும் சென்று வந்தார்கள்.

1891ஆம் ஆண்டில் ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னாஸ் வால்டர் என்ற ஜெர்மானியர், தனக்கு முன்பு ஆய்வு செய்தவர்களின் குறிப்புகளை வைத்துக் கொண்டு, ஆதம் பாலத்தை நேரடியாக பார்த்து ஆய்வு செய்தார். அவர், பருவகால மாற்றம், கடல் நீரோட்டம், கடற்கரையில் இருந்து வந்த மணல் போன்றவற்றால்தான் மணல் திட்டுகள் உருவாயின, கடல்மட்டம் உயரும்போது அவை மறைந்துவிடுகின்றன; குறையும்போது திட்டுகள் மேலே வருகின்றன என்று கூறியுள்ளார். வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரிகளை விரிவாகவே குறிப்பிடும் அவர், ஆதம் பாலத்தை வானரர்கள் கட்டினார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் பாலம் இருந்திருந்தால் அதிலேயே அவர்கள் சென்றிருப்பார்கள். சேது பாலத்தில் மனிதர்கள் நடமாடியதற்கான ஆதாரமே இல்லை. பிரிட்ஜ் என்றால் பாலம் என்று மட்டும் அர்த்தம் அல்ல. நிரப்புதல், இணைப்பு என்ற அர்த்தமும் உண்டு. அதனால் இணைப்புப் பகுதி என்ற அளவில், ஆதம் பிரிட்ஜ் என்றழைப்பதில் தப்பில்லை. ராமர் பாலம் என்றழைக்கப்படும் திட்டுகள் 32 ஆயிரம் மீட்டர் நீளம் உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்துக்கு 300 மீட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் பெரிதாக பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டுவிடாது எ‌ன்றராமசா‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்