சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீட்டு எடுப்பதற்காக அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்ட ஒரு தலைவர், அமைதிக்காக பேச்சு நடத்தியவர், படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். அப்படியென்றால் சிறிலங்கா அரசு அமைதியை விரும்பவில்லை என்பதைத் தானே இது காட்டுகிறது என்றார்.
கொல்லப்பட்ட அந்த தலைவருக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ உள்பட பல தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு குரல் அதை எதிர்க்கிறது. அந்த குரல் எங்கிருந்து வந்தது? எந்த இனத்தில் இருந்து வந்தது? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கனிமொழி.