குடியரசு தலைவ‌ர் பிரதீபா பட்டீல் நாளை சென்னை வருகை!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (10:57 IST)
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியர‌சு‌ தலைவ‌ர் பிரதீபா பட்டீல் நாளசென்னை வருகிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் குடியரசு‌ தலைவ‌ர் பிரதீபா பட்டீல் நாளை காலை 10.15 மணிக்கு புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தை காலை 11.30 மணிக்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து 11.35 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கத்தை மதியம் 12 மணிக்கு வந்தடைகிறார்.

அங்கு நடக்கும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஒரு மணிநேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 1 மணிக்கு அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்படுகிறார். 1.25 மணிக்கு விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு அங்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது.

மதியம் 1.30 மணிக்கு விமானத்தில் ஏறி, மாலை 4.15 மணிக்கு குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பட்டீல் புதுடெல்லி செல்கிறார். அவருக்கு மதிய உணவு விமானத்தில் வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்