மதத்தினரை புண்படுத்தாமல் சேது ‌தி‌ட்ட‌ம் நிறைவேற்றவும்: வைகோ!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (17:01 IST)
''எ‌ந்த மத‌த்‌தின‌ரி‌ன் உ‌ள்ள‌த்தையு‌ம் பு‌ண்படு‌த்‌தி‌ப் பேசாம‌ல் சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்'' எ‌ன்று ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

சேது சமுத்திரக்கால்வாய்த் திட்டம் குறித்து, முதலமைச்சர் கருணாநிதிக்கு சில கேள்விகளை விடுத்து, என் குற்றச்சாட்டை அவர் மறுத்து நிரூபித்தால், அரசியலை விட்டே விலகுகிறேன் என்று செப்டம்பர் 30 ஆம் நாள் சென்னையில் நான் பேசியதற்கு முதலமைச்சர் கருணாநிதி என் குற்றச்சாட்டை மறுக்கமுடியாமல் சாமர்த்தியமாகத் திசைதிருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார் எ‌ன்றவைகேகூ‌றியு‌ள்ளா‌ர்.

2001 பிப்ரவரி 1ஆ‌ம் சென்னையில் எண்ணூர் துணைத் துறைமுகத்தை, பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்த விழாவில், பங்கேற்று பேசிய அன்றைய முதல்வர் தனது உரையில் துறைமுகங்களைப் பற்றிப் பேசுகையில், சேது சமுத்திரத்திட்டத்தைப்பற்றி வலியுறுத்தவும் இல்லை. அது பற்றிக் குறிப்பிடவும் இல்லை எ‌ன்று வைகோ ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

கருணாநிதி தன் கடமையை மறந்தாலும், சேதுக்கால்வாய்த் திட்டத்தை அங்கே நினைவுறுத்தத் தவறினாலும், பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய உரையில், 'தமிழக மக்களின் நீண்டநாள் கனவாக இருந்து வரும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தோம். அந்த உறுதியை நாங்கள் மறக்கவில்லை. நிச்சயம் நிறை வேற்றுவோம்' என்று குறிப்பிட்டார் எ‌ன்று வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சேதுக்கால்வாய்த் திட்டம் எப்படியும் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். எந்த மதத்தினரின் உள்ளத்தையும் புண்படுத்திப் பேசாமல், கருமமே கண்ணாகச் செயல் ஆற்றுவதுதான் இந்த வேளையில் தேவையான அணுகுமுறை ஆகும். மீனவமக்களின் கவலையையும், ஐயத்தையும் போக்கிடும் வகையில் தகுந்த விளக்கங்களைத் தருவதுடன், பெரியகப்பல்கள் செல்லுகிற விதத்தில், சேதுக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்க வழி காண வேண்டும் எ‌ன்று ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்