பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (11:23 IST)
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நேற்று முதல் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை முழுகொள்ளளவு கொண்டுள்ளதால் உபரி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால் பத்துக்கும் மேற்பட்ட ஆற்றங்கரையோர நகரங்களுக்கு வெள்அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. நேற்று அணைக்கவரும் நீரின் அளவு திடீரென அதிகரித்தது.

அணைக்கு வினாடிக்கு 8500 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் செப்டம்பரமாதம் 102 அடிக்கு மேல் தண்ணீர் நிறுத்தக்கூடாது என்ற விதியுள்ளது. மூன்று அடி குறைவாக இருக்கவேண்டும். காரணம் தென்மேற்கு பருவமழை திடீரென தீவிரமடைந்து தண்ணீர் வரத்து அதிகாரித்தால் இதை சமாளிக்க மூன்று அடி வேண்டும்.

தற்போது அணையின் நீர்மட்டம் 101.98 ஆகவே நேற்று இரவு பவானி ஆற்றில் வினாடிக்கு 5950 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் கலக்கும். மேலும் பவானிசாகர் அணை முழுகொள்ளளவு எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடபோவதால் கரையோர மக்களுக்கு வெள்அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்