கிராம நிர்வாக அலுவலர் (Village Administration Officer) தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்த தேர்வு முடிவுகள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வாணைய இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 2,500 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 10 ந் தேதி நடைபெற்றது.
இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 166 ஆண்களும், 1 லட்சத்து 97 ஆயிரத்து 668 பெண்களும் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வின் முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.
இது குறித்து தேர்வானணயத்தின் தலைவர் ஏ.எம்.காசிவிஷ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தேர்வாணைய முடிவுகளை பற்றி விளக்க, அலுவலகத்தில் இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த என்.எம்.கணேஷ் 283.5 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 20 நாட்களுக்குள் தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் மட்டுமே சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும் என்று கூறினார்.