ஒழுக்கத்தை தொ‌ண்ட‌ர்க‌ள் கடைபிடியுங்கள்: கிருஷ்ணசாமி!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (16:35 IST)
''காங்கிரஸதோழர்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கட்சியின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டின் மீது மக்களுக்குள்ள நம்பகத்தன்மை பாழ்பட்டு போகும் வகையில் யாரும் நடந்து கொள்ள வேண்டாம்'' என்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ஒரு நிகழ்ச்சி என்றால் அது வும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் என்று அழைப்பிதழ் போட்டு நடத்தப்பெறும் ஒரு நிகழ்ச்சியென்றால் அதற்கென ஒரு வழிமுறை உண்டு. பாரம்பரியமிக்க காங்கிரஸ் பேரியக்கத்தில் அந்நெறிமுறை கவனமாக பார்க்கப்பட வேண்டிய பண்பாடாகும் எ‌ன்று க‌ிரு‌ஷ்ணசா‌மி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

ஆனால் ஒரசிலரசிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தி மக்கள் மத்தியில் அவப்பெயரை உரு வாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு யாரா வது காங்கிரஸ் நடைமுறைக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது அன்னை சோனியாகாந்தியை அவமானப்படுத்துகிற செயலாகும் என மா‌நில கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அப்படிப்பட்ட நபர்களின் தவறான செயலுக்கு காங்கிரஸ் தோழர்கள் ஆட்பட்டுவிடாமல் காங்கிரஸ் கட்சிப் பெயரை பயன்படுத்தி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும்போது மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதுள்ள நம்பகத்தன்மை குறையாத வகையில் கவனமாக இருந்து நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்