டி.டி.எச்.க்கு ரூ.100க்கு குறையாமல் கேளிக்கை வரி மற்றும் ஆடம்பர வரி விதிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கேபிள் உரிமையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
டி.டி.எச். என்ற நேரடி ஒளிபரப்பு செய்யும் தொழில் எந்தவித கேளிக்கை வரியும் செலுத்தாமல் வலம் வருகிறது. எனவே டி.டி.எச்.க்கு மகராஷ்டிரா மற்றும் பல வட மாநிலங்களை போல தமிழ்நாட்டில் கேளிக்கை வரி மற்றும் ஆடம்பர வரி விதிக்க வேண்டும் என்று அந்த மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் வேண்டு கோள் விடுத்திருந்தேன். அதனை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். டி.டி.எச்.க்கு ரூ. 100க்கு குறையாமல் கேளிக்கை வரி மற்றும் ஆடம்பர வரி விதிக்க வேண்டும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் இளவரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
மழைக்காலத்தில் பாதிப்புக்குள்ளாகி பொது மக்களுக்கு தொல்லை தரும் டி.டி.எச். தொழில் நுட்பம் மக்களை பாதிப்படையாமல் விழிப்புணர்வு ஏற்பட வழி கிடைக்கும் என்று முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் வரும் 23ஆம் தேதி அவசர கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கேபிள் டி.வி. உரிமையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.