தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் தி.மு.க.வின் ஆட்சியில் பங்கு கேட்கும் திட்டம் இனிமேல் இல்லை என்று மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
இது குறித்து ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கும், ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் உறவு சிறப்பாக உள்ளது. எங்களுக்குள் எவ்வித விரிசல்களும் இல்லை. தி.மு.க. ஆட்சியில் பங்குகேட்கும் திட்டம் காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் இல்லை என்றார்.
சாம்ராஜ்நகர் முதல் சத்தியமங்கலம் வரை கொண்டுவரவுள்ள ரயில்வே திட்டத்தில் தமிழ்நாடு வனப்பகுதியில் ஆய்வு நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் ஆய்வு பணி மேற்கொள்ளப்படும் என்றார் மத்திய அமைச்சர் இளங்கோவன்.