உ‌ச்‌சி ‌பி‌ள்ளையாரு‌க்கு 30 ‌கிலோ கொழு‌‌க்க‌ட்டை படைய‌ல்!

Webdunia

திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:01 IST)
திரு‌ச்‌‌சி மலை‌க்கோ‌ட்டை உ‌ச்‌சி‌ப் ‌பி‌ள்ளையாரு‌க்கு 30 ‌கிலோ கொழு‌க்க‌ட்டை படைய‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

திரு‌ச்‌சி மலை‌க் கோ‌ட்டை உ‌ச்‌சி‌ப் ‌பி‌ள்ளையா‌ர் கோ‌வி‌‌லி‌ல் ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி ‌விழா ‌மி‌க‌ச் ‌சிற‌‌ப்பாக கொ‌ண்டாட‌ப்ப‌ட்டது. ‌சிற‌‌ப்பு அ‌பிஷேக ஆராதனைக‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டன.

இதை‌த் தொட‌ர்‌ந்து 30 ‌கிலோ எடை‌யி‌‌ல் கொழு‌க்க‌ட்டை படை‌க்‌க‌ப்ப‌ட்டது. இத‌ற்கு 45 ‌‌கிலோ ப‌ச்ச‌‌ரி‌சி, 35 ‌கிலோ வெ‌ல்ல‌ம், 3 ‌கிலோ எ‌ள், அரை‌‌க் ‌கிலோ ஏல‌க்கா‌ய், 4 ‌கிலோ நெ‌ய், 60 தே‌ங்கா‌ய் ஆ‌கியவ‌ற்றை கொ‌‌ண்டு 30 ‌கிலோ எடையு‌ள்ள கொழு‌‌க்க‌ட்டை தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.

அ‌ன்று மாலை பாலகணப‌தி அல‌ங்கார‌த்‌தி‌ல் ‌விநாயக‌ பெருமா‌ள் ப‌க்‌த‌ர்களு‌க்கு அரு‌ள் பா‌வி‌த்தா‌‌ர். ஏராளமான ப‌க்த‌ர்‌க‌ள் கூ‌ட்ட‌‌ம் மலை‌க்கோ‌ட்டை‌யி‌ல் ‌நிர‌ம்‌பி வ‌ழி‌ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்