ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுத் திட்டம்: ஜெயலலிதா!
Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (16:04 IST)
ராமர் பாலத்தை இடிக்காமல், கொடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திட்டங்களில் ஏதாவது ஒன்றை பரிசீலனை செய்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராமர் பாலம் என்ற புராதன சின்னத்தை இடித்து விட்டு சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் கருணாநிதியும், மத்திய கப்பல் தரைவழி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான டி.ஆர்.பாலுவும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளார்.
ராமர் பாலத்தை இடிக்காமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கியமான கோரிக்கை. ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு மாற்றுத் திட்டங்கள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டு உள்ளன. அதில் சாத்தியமான ஒன்றை மத்திய அரசு பரிசீலனை செய்து இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். ஆனால் அமைச்சர் டி.ஆர்.பாலு எதையும் ஆராயாமல் மக்களின் விருப்பத்தை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு முரண்பாடான செயலாகும் என ஜெயலலிதா கண்டம் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பை பற்றியும் கவலைப்படாமல் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை பற்றியும் கவலைப்படாமல், எப்படியும் இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று விடாப்பிடியாக இருக்கிறது மத்திய அரசு. புராதனச் சின்னமாக ராமர் பாலத்தை இடிக்காமல், கொடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திட்டங்களில் ஏதாவது ஒன்றை பரிசீலனை செய்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.