தா. கிருட்டிணன் கொலை வழக்கு ஆந்திராவிற்கு மாற்றம்!

Webdunia

திங்கள், 27 ஆகஸ்ட் 2007 (20:29 IST)
தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், தி.மு.க. தலைவர் கருணாநிதி மகன் மு.க. அழகிரி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்தக் கொலை வழக்கு விசாரணை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த முக்கிய சாட்சிகளான சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், சுரேஷ் குமார் ஆகியோர், இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட அழகிரியின் தந்தை தற்போது தமிழக முதல்வராக உள்ளார். மேலும் அழகிரி மதுரையில் செல்வாக்கு மிக்கவராக திகழ்கிறார். எனவே சாட்சிகள் தைரியமாக நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி அளிக்கமாட்டார்கள். எனவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தா. கிருட்டிணன் கொலை வழக்கை ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்