தேனி மாவட்டம் முத்தனம்பட்டியில் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முத்தனம்பட்டியில் கள்ளர் அரசு உயர் நிலைப் பள்ளி உள்ளது. 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், 3 உதவி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதால், அனைத்து வகுப்புகளுக்கும் படாம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளுக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்கக் கோரி பள்ளி மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அபோது அங்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதில் 20 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.