அவசர நிலை : கல்பாக்கத்தில் சிறப்புப் பயிற்சி!

Webdunia

செவ்வாய், 31 ஜூலை 2007 (19:27 IST)
கல்பாக்கத்தில் உள்ள அணு சக்தி மையங்களில் விபத்து ஏதேனும் நிகழ்ந்தால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகியன எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட அவசரகால தயார் நிலைத் திட்டத்தை நடைமுறைப்பூர்வமாக ஒரு அவசர நிலை பயிற்சியாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கல்பாக்கம் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள 11 கிராமங்களைக் கொண்ட பகுதியில் இந்த சிறப்பு அவசர பயிற்சி நடத்தப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவர்கள், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், போக்குவரத்துத் துறையினர், மீன்வளம், வனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கல்பாக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி முகாமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் யாதவ் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு சென்னை அணு சக்தி நிலையத்தின் தலைமை இயக்குநர் எஸ். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்