மேட்டூர் நீர்மட்டம் 119 அடியாக குறைந்தது

Webdunia

செவ்வாய், 31 ஜூலை 2007 (13:31 IST)
நீரவரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக குறைந்துவிட்டது.

மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியையும் தாண்டி 121 அடியை எட்டி கடந்த வாரத்தில் காவிரி கரையோட மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

தற்போது அணைக்கு விநாடிக்கு 11,750 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து 11,750 கன அடியாக இருக்கும் நிலையில் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்