திருச்சி அருகே இரு பிரிவினரிடையே மோதல் : ஒருவர் வெட்டிக் கொலை

Webdunia

திங்கள், 30 ஜூலை 2007 (12:47 IST)
திருச்சி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் இரண்டு காவலர்கள் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பட்டியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் மற்றொரு இனத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புருஷோத்தமன் அடையாளம் தெரியாத சில நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த தகவல் தெரிந்ததும் புருஷோத்தமனின் உறவினர்களும், மற்றொரு இனத்தவரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். தகவல் அறிந்தம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவர்களை சமரசப் படுத்த முயன்ற போது இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர்.

இந்த மோதலில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்