சுகாதாரமில்லாத உணவு விடுதிகள், தேநீர் கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நோய் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குடி நீரில் குளோரின் மருந்து கலந்து வினியோகம் செய்யவும், தேநீர் கடைகள், உணவு விடுதிகளில் வெந்நீர் கட்டாயம் கொடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, சென்னை மேயர் சுப்பிரமணியன் பல இடங்களுக்கு சென்று இன்று சோதனை மேற்கொண்டார். அப்போது சுகாதாரம் இல்லாத குடி நீர் வழங்கிய சில உணவு விடுதிகளை மூட அவர் உத்தரவிட்டார்.
அனைத்து உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் சுகாதாரமான குடி நீர் வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும், அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் மேயர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.