கூட்டுறவுத் தேர்தல் ரத்து செய்தது தோழமை கட்சிகளின் கருத்துகளை எண்ணிப்பார்த்து அரசு செயல்பட்டதின் எடுத்துக்காட்டு என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதிலில், கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மாற்றப்பட்ட அதிகாரிகளை, தேர்தல் முடிந்த பின்னர் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மீண்டும் அதே பணியில் நியமித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காலம் தான் தன் அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகளோ, தோழாமை கட்சிகளோ சில கருத்துகளை சொல்லும் போது, அது எந்த அளவிற்கு சரியானது என்று எண்ணிப்பார்த்து இந்த அரசு செயல்பட்டுள்ளது என்பதன் எடுத்துக்காட்டு தான் இந்த கூட்டுறவுத் தேர்தல் ரத்து என்று கூறியுள்ளார்.