கூட்டுறவு தேர்தல்கள் ரத்து : தமிழக அரசு அறிவிப்பு

Webdunia

புதன், 11 ஜூலை 2007 (19:19 IST)
தமிழகம் முழுவதும் இதுவரை நடைபெற்றுள்ள, நடைபெற உள்ள கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒட்டு மொத்தமாக ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்தில் முறைகேடுகளும் ஆளுங்கட்சியினரின் ஆதிக்கமும் பரவலாக நடந்து வருகிறது என்று எதிர் கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள மார்க்ஸிட், பா.ம.க. கட்சிகளும் குரல் எழுப்பியதை அடுத்து கூட்டுறவு சங்க தேர்தல்களை முழுமையாக ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தல்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் எப்போது தேர்தல் நடத்துவது, எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விவாதித்து அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்