சென்னை மாநகரக் காவல் துறையினர் நேற்று இரவு நடத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 500 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்!
சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் தலைமையில் நடந்த இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 386 ரவுடிகள், 67 பழைய குற்றவாளிகள், பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 12 பேர், காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த 38 பேர் உட்பட 503 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னையில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்கள் தொடர்பாக இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.