தூத்துக்குடி அருகே பள்ளிப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமுற்றனர்!
திருச்செந்தூர் அருகில் உள்ள மனப்பாடு எனும் இடத்தில் உள்ள செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கொடைக்கானல் சென்றுவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து தேனிக்குச் சென்ற சரக்கு லாரி மோதியது.
இதில் லாரி ஓட்டுநர் முத்துராஜா (வயது 50), பேருந்தில் இருந்த மாணவிகள் நிர்மலா (15), அபிஷா (13) ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 19 மாணவிகள், 3 ஆசியர்கள் காயமுற்றனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.