அதிமுக கட்டிடம் இடிப்பு : முதல்வர் விளக்கம்

அதிமுக அலுவலகத்தை இடிக்கக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுப்பியுள்ள நோட்டீசுக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதிலில், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆதிமுக பொதுச் செயலாளராக இருந்த போது கட்டிய அதிமுக அலுவலகத்தை 1997 - 98 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா புதுப்பித்து இரண்டு மாடிகள் கட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் 2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த அனுமதி பெறாத கட்டிடடத்திற்கான அனுமதியை முறைப்படி பெற தவறி விட்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார். இதற்கான கண்காணிப்பு குழு ஒன்றை, நீதி மன்றம் சார்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அரசை குறைகூறுவது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் அதிமுக அலுவலகத்தை இடிக்கக்கோரி அனுப்பப்பட்ட நோட்டிசுக்கு அரசுக்கும் எந்த வித தொடர்பு இல்லை என்று கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, நோட்டீஸ் கிடைக்கப்பட்டவர்கள் தங்களிடம் ஆவணங்களும், தகுந்த விளக்கமும் இருந்தால் கண்காணிப்புக் குழுவிடம் விளக்கமாக தரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்