இளம் வீரர்களின் கால்பந்து திறனை மேம்படுத்த திட்டம்!

புதன், 2 ஏப்ரல் 2008 (18:33 IST)
இந்தியாவில் இளம் வீரர்களின் கால்பந்தாட்டத் திறனை மேம்படுத்தும் வகையில் தீக்சா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் உள்ள கால்பந்து பயிற்சி நிறுவனமான கோய்ர்வெர் கோச்சிங் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தீக்சா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் இளம் வீரர்களை பங்குப்பெறச் செய்யும் வகையில் வளர்ந்துள்ளது. இது கோய்ர்வெர் கோச்சிங் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தையடுத்து, வரும் 7 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியாவில் பயிலரங்கை நடத்த உள்ளது.

இந்த 8 நாள் பயிலரங்கில் மூன்று சர்வதேச தொழில் நெறிஞர்கள் தங்களது அனுபவங்களை கால்பந்து பயிற்சியாளர்களுக்கு வழங்க உள்ளனர். மேலும் 9 முதல் 18 வயது வரையிலான வீரர்களுக்கு ஐந்து நாட்கள் வீதம் இரண்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவற்றில் கோய்ர்வெர் கோச்சிங் நிறுவனத்தைச் சேர்ந்த பால் கிப்பான்ஸ், நிக் கேட்ஸ் ஆகிய தொழில் நெறிஞர்கள் இடம் பெறுகின்றனர்.

இவர்களிடம் கடந்த சில ஆண்டுகளாக தீவிர பயிற்சி பெற்ற சீய்ன் மில்லிங்டன், பிரோம்விச் அல்பியான் ஆகியோரும் பயிற்சியாளர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்