சிறந்த உள் நாட்டு வீரராக யூசுஃப் பத்தான் தேர்வு

செவ்வாய், 25 மார்ச் 2008 (12:45 IST)
2007- 08 ஆம் ஆண்டிற்கான சியட் வழ‌ங்கு‌ம் சிறந்த உள் நாட்டு கிரிக்கெட் வீரர் விருதிற்கு பரோடா ஆல்ரவுண்டர் யூசுஃப் பத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உயர்மட்ட ரஞ்சி போட்டிகளில் இவரது திறமையான ஆட்டம் காரணமாக இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 50 புள்ளிகள் பெற்ற யூசுஃப் பத்தானுக்கு ரூ. 2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

டெல்லி துவக்க வீரரான ஆகாஷ் சோப்ரா 41 புள்ளிகளுடன் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மென் விருதை பெற்றார். 40 புள்ளிகள் பெற்ற கர்னாடகா அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல் பிரதேச அணியின் ரிஷி தவான் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ராஜ்கோட்டை சேர்ந்த தெஜேஷ்வர் புஜாரா ஆண்டின் சிறந்த இளம் வீரராகவு‌ம் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்