உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்!

வியாழன், 17 ஜனவரி 2008 (10:34 IST)
உலக கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் இரு‌ந்து வ‌ரு‌கிறது.

உலக அணிகளின் கால்பந்து தர வரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2வது இட‌‌த்‌தி‌ல் பிரேசிலு‌ம், இத்தாலி அணி 3-வது இட‌த்‌திலு‌ம், ஸ்பெயின் அணி 4-வது இடமும், ஜெர்மனி அணி‌க்கு 5வது இடமு‌ம், செக் குடியரசு அணி 6-வது இட‌த்‌திலு‌ம், பிரான்ஸ் அணி 7-வது இடமும், போர்ச்சுக்கல் அணி 8-வது இடமும், ஆலந்து அணி 9-வது இடமும், குரோஷியா அணி 10-வது இட‌த்‌திலு‌ம் உ‌‌ள்ளன.

கிரீஸ், இங்கிலாந்து, ருமேனியா, ஸ்காட்லாந்து, மெக்சொகோ, துருக்கி, கொலம்பியா, பல்கேரியா ஆகிய அணிகள் முறையே 11-வது இடம் முதல் 18-வது இடம் வரை வகிக்கின்றன. நைஜீரியா அணி 20-வது இடத்தில் இருந்து 19-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 19-வது இடத்தில் இருந்த அமெரிக்கா 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணி 144-வது இடமும், பாகிஸ்தான் அணி 163-வது இடமும், இலங்கை அணி 167-வது இடமும், வங்காளதேசம் 168-வது இடமும் வகிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்