ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை அன்னா சக்வெடாட்சே வீட்டில் புகுந்து அவரையும் அவரது பெற்றோரையும் கட்டிப்போட்டு சுமார் 2 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை திருடர்கள் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.
மாஸ்கோ புற நகர்ப் பகுதியில் சக்வெடாட்ஸேயின் இல்லத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.
சுமார் 4 கொள்ளையர்கள் அவரது வீட்டில் புகுந்ததாகவும் சக்வெடாட்சே மற்றும் அவரது பெற்றோர் ஆகியோரை கட்டிப்போட்டு விட்டு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
2007 யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் அரையிறுதி வரை வந்த சக்வெடாட்சே, 1.5 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகை வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர் தற்போது உலக டென்னிஸ் தரவரிசையில் 6ம் இடத்தில் உள்ளார்.