உடல்நலம் சரியில்லாத நிலையிலும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பந்துவீசியது பாராட்டுக்குரியது என்று சவுரவ் கங்கூலி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பூரண குணமாகாத நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டது சரியல்ல என்று கருதப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் இந்திய அணித் தலைவர் கங்கூலி, அக்தருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இரண்டாம் நாளான நேற்று அக்தர் உண்மையிலேயே அதிவேகமாக பந்துவீசினார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அக்தர் பந்துவீசிய விதம் பாராட்டதக்கது. அவர் நினைத்திருந்தால் தனக்கு முழு குணமாகவில்லை என்று கூறி ஓய்வெடுத்திருக்கலாம், ஆனால் அணியின் நலன் கருதி அவர் பந்துவீசியிருக்கிறார் என்று கங்குலி கூறியுள்ளார்.