இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையே இலங்கையில் நடக்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு நடுவராக நியமிக்கப்பட்டிருந்த தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ரூடி கொயர்ட்சனை திடீரென சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) திரும்ப பெற்று உள்ளது. அவருக்கு பதிலாக பாகிஸ்தானை சேர்ந்த அலிம்தர் நடுவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சமீபத்தில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை வீரர் சங்ககரா, கொயர்ட்சனின் தவறான தீர்ப்பால் 8 ரன்களில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை பறிகொடுத்தார். இலங்கை பத்திரிகைகள் கொயர்ட்சனுக்கு கண்டனம் தெரிவித்து செய்திகள் வெளியிட்டு இருந்தன. அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சர்வதேச கிரிக்கெட் பேரவை அவரை திரும்பி பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.