''ஆஸ்ட்ரேலிய அணியை இந்திய அணியால் வீழ்த்த முடியும்'' என்று அணித் தலைவர் அனில் கும்ளே கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனில் கும்ளே செய்தியாளர்களிடம் கூறுகையில், மற்ற அணிகளை விட ஆஸ்ட்ரேலிய அணி மிகவும் வலுவானது. ஆனால் அந்த அணியை வெல்ல முடியாத என்று கூறிவிட முடியாது. கடந்த முறை ஆஸ்ட்ரேலிய பயணத்தின் போது இந்தியா சிறப்பாக விளையாடியது.
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. எனவே இந்த முறை இந்திய அணி ஆஸ்ட்ரேலியாவை வெல்வதற்கான சாத்தியம் இருக்கிறது.
இந்தியாவை விட ஆஸ்ட்ரேலியா வலுவான அணி என்றாலும், ஆஸ்ட்ரேலியாவை தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறேன். ஆஸ்ட்ரேலியாவின் முன்னணி வீரர்கள் வார்னே, லாங்கர், மெக்ராத் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்று இந்திய அணித் தலைவர் அனில் கும்ளே கூறினார்.