டெ‌ண்டு‌ல்க‌ர் சத‌ம் அடி‌க்காம‌ல் போனது வேதனை: தோ‌னி!

Webdunia

வெள்ளி, 16 நவம்பர் 2007 (11:02 IST)
''டெ‌ண்டு‌ல்க‌ர் சத‌ம் அடி‌க்காம‌ல் போனது ஒ‌ட்டுமொ‌த்த அ‌ணி‌யினரையு‌ம் வேதனை‌யி‌ல் ஆ‌ழ்‌த்‌தியது'' எ‌ன்று இ‌ந்‌திய அ‌ணி‌த் தலைவ‌ர் தோ‌னி கூ‌றினா‌ர்.

பா‌கி‌‌‌ஸ்தானு‌க்கு எ‌திரான ஒரு நாள் தொடரை கை‌ப்ப‌ற்‌றி இரு‌ப்பது கு‌றி‌த்து அ‌ணி‌த் தலைவ‌ர் தோ‌னி கூறுகை‌யி‌ல், “நமது அணி வீரர்கள் ஒட்டு மொத்த முயற்சியால் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளோம். அணியிண் பந்து வீச்சு சரியாக இல்லை. பந்து வீச்சு சரியில்லாத போது அதில் ஏற்படும் பாதிப்பை பேட்ஸ்மேன்கள்தான் ஈடுசெய்ய வேண்டும். அந்த வகையில் நமது பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்ந்து விளையாடியதால் வெற்றி பெற்றோம்.

பந்து வீச்சு, பீல்டிங் இரண்டிலுமே நம்மிடம் குறை பாடுகள் உள்ளன. அதிலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு தேவையான பந்து வீச்சு திறன் குறைவாக உள்ளது. இதில் நம்மைவிட பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆட்டக்களம் ஈரப்பதமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சு எடுபடாது. சுழற்பந்து வீச்சு தான் சரியாக இருக்கும். அதில் பாகிஸ்தான் வீரர்கள் உலகிலேயே முன்னணியில் உள்ளனர்.

டெண்டுல்கரின் பொறுப்பான ஆட்டம்தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அவர் எங்களுக்கெல்லாம் உத்வேகத்தை தரும் வகையில் ஆடினார். அதே நேரத்தில் அவர் சதம் அடிக்காமல் போனது ஒட்டுமொத்த அணியினரையும் வேதனையில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு மட்டும் ஒரு டெஸ்ட் போட்டி உள்பட 7 தடவை 90 ரன்களுக்கு மேல் கடந்தும் சதம் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அடுத்த சதம் எப்போது அடிப்பார் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். மிக விரைவில் அவர் சதம் அடிப்பார் என்று நம்புவோம்.

நானும் யுவராஜ்சிங்கும் இணை சேர்ந்து ஆடுவது மிக பொருத்தமாக உள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உதவி செய்து ஆடுகிறோம். ஒருவர் தவறினாலும் மற்றவர் அதை ஈடுகட்டும் வகையில் செயல்படுகிறோம” எ‌ன்று அ‌‌ணி‌த் தலைவ‌ர் தோ‌னி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்