இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

Webdunia

செவ்வாய், 13 நவம்பர் 2007 (12:13 IST)
இந்திய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கே.சி. இப்ராஹிம் கராச்சியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.

1948- 49 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால் அதன் பிறகு 4 டெஸ்ட் போட்டிகளையே அவர் விளையாடினார்.

மும்பை அணிக்காக ரஞ்சி போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். இதில் குறிப்பாக 1947- 48 ரஞ்சி சீசனில் 1171 ரன்களை 167.29 என்ற சராசரியுடன் எடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

வினூ மன்காடுடன் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கியுள்ள இப்ராஹிம் 1950ம் ஆண்டு கராச்சிக்கு குடி பெயர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்