மா‌லி‌க்‌‌கி‌ற்கு அ‌ணி‌த் தலைவ‌‌ர் ‌திற‌ன் குறைவு: ரமீ‌ஸ் ராஜா கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (17:21 IST)
அ‌ணி‌த் தலைவரு‌க்கு‌ரிய திறன் சோயிப் மாலிக்கிடம் குறைவாகவே இருக்கிறது'' எ‌ன்று பா‌‌கி‌ஸ்தா‌ன் மு‌ன்னா‌ள் அ‌ணி‌த் தலைவ‌ர் ர‌மீ‌ஸ் ராஜா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியாவுடனான முத‌ல் ஒருநா‌ள் போ‌ட்டி‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி தோ‌ல்‌வியடை‌ந்தது கு‌றி‌த்து பாகிஸ்தான் முன்னாள் அ‌ணி‌த் தலைவ‌ர் ரமீ‌ஸ்ராஜா கூறுகை‌யி‌ல், இந்தியா-பாகிஸ்தான் போட்டித்தொடர் என்றாலே விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் நேற்றைய போட்டி அப்படி அமையாதது கவலை அளிக்கிறது

பாகிஸ்தான் வீரர்களின் பேட்டிங் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் மூலமே ஆட்டம் அவர்கள் கையை விட்டு சென்றது புரியும். முகமதுயூசுப் எப்போதும் போல் இயல்பாக ஆடினார். இன்சமாம் போன்ற திறமைவாய்ந்த வீரர்கள் இல்லாதது பிரச்சினைதான்.

சோயிப் மாலிக்கின் அண‌ி‌த் தலைவ‌ர் பதவி கேள்விற்குறியாக இருக்கிறது. தோனி, யுவராஜ் சிங் ஆடும்போது அவர் இரண்டு பக்கமும் சுழற்பந்து வீச்சை பயன்படுத்தினார். ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சை பயன்படுத்தி இருக்க வேண்டும். இது அவரது தவறான முடிவாகும்.

அ‌ணி‌த் தலைவரு‌க்கு‌ரிய திறன் அவரிடம் குறைவாகவே இருக்கிறது. பீல்டிங் ஏமாற்றம் அளிக்கிறது. தோனி முன்னதாக களம் இறங்கி அபாரமாக விளையாடினார். அவரது இந்த முடிவு பாராட்டத்தக்கது எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ன்னா‌ள் அ‌ணி‌த் தலைவ‌ர் ர‌‌மீ‌ஸ்ராஜா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்