பண மோசடி: பவார் மீது எஃப்.ஐ.ஆர்.- நீதிமன்றம் உத்தரவு!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (13:22 IST)
இந்திய ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு எதிராக ஹைதராபாதில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் கூடுதல் கட்டணத்திற்கு அனுமதி சீட்டுகளை விற்று 12 கோடி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷரத் பவார் மற்றும் 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் பி.ராதாகிருஷ்ணா என்பவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதாவது கிரிக்கெட் வாரியம் 24,000 டிக்கெட்டுகளை கூடுதல் விலை வைத்து விற்று அதில் ரூ.12 கோடி சுருட்டியதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். பொது மக்களுக்கு 15,000 டிக்கெட்டுகளே விற்கப்பட்டன என்றும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த ஹைதராபாத் பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி, பிசிசிஐ தலைவர் ஷரத் பவார், செயலர் நிரஞ்சன் ஷா, ஹைதராபாத் கிரிக்கெட் வாரிய தலைவர் வினோத் மற்றும் செயலர் ஷிவ்லால் யாதவ் ஆகியோர் மீது புகார் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.



வெப்துனியாவைப் படிக்கவும்