Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (10:34 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்கின் தந்தை கிஷான் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70 ஆகும்.
டெல்லியில் நஜாப் கர்ரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. அப்போது சேவாக், அவரது சகோதரர்கள் உடனிருந்தனர். அவரது உடல் அருகில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கில் சேவாக்கின் உறவினர்கள், நண்பர்கள், டெல்லி ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தந்தையின் மரணம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் நடத்திய பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.