இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு டயோடா கோரோலா கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த காரை ஜார்கண்ட் மாநில முதல்வர் மதுகோடா தோனியிடம் வழங்கினார்.
20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றவுடன் தோனிக்கு எதிர்பாராத பரிசு ஒன்று அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த காரை அவர் நேற்று பரிசாக வழங்கினார். அது மட்டுமின்றி தோனிக்கு 5 லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையையும் முதலமைச்சர் கோடா வழங்கி பாராட்டினார்.