கிரிக்கெட் அணித் தேர்வாளர்களுக்கு சம்பளம்

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (10:43 IST)
இந்திய கிரிக்கெட் நிர்வாக அமைப்பை தொழில்பூர்வமாக மாற்ற முயற்சிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாக அணித் தேர்வாளர்களுக்கு ஒவ்வொரு டெஸ்ட் மற்றும் ஒவ்வொரு ஒரு நாள் போட்டிகளுக்கும் தனித்தனியாக ஊதியங்களை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

வரும் பாகிஸ்தான் தொடர் முதல் டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு ரூ.50,000ம் சம்பளமும், கூடுதலாக தினப்படி உதவித் தொகையாக ரூ.15,000மும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் அணித் தேர்வாளர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டியின் மூலம் ரூ.125000 கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் போட்டிகளுக்கு போட்டி ஒன்றுக்கு ரூ.65,000 சம்பளமாக வழங்கப்படும்.

தற்போது உள் நாட்டில் விளையாடப்படும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின்போது அணியுடன் செல்லும் தேர்வாளர்களுக்கு வெறும் தினப்படி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. வெளி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரே ஒரு தேர்வாளர் மட்டுமே அணியுடன் செல்வார்.

வெப்துனியாவைப் படிக்கவும்