சென்னையில் வரும் 21ம் தேதியன்று ஒரு நாள் ஹாக்கி போட்டித் தொடர் நடைபெறுகிறது. இது சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
சென்னை ஹாக்கி கூட்டமைப்பின் அனுமதியுடன் இந்த ஹாக்கி தொடரை ஸ்டார் ஆஃப் மேக்கி ஹாக்கி கிளப் நடத்துகிறது.
இந்த போட்டித் தொடரில் அணிக்கு 9 வீரர்கள் கொண்ட அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.10,000 பரிசுத் தொகையும், ரன்னர்களாக முடியும் அணிக்கு ரூ.5000 பரிசுத் தொகையும் அளிக்கப்படுகிறது.