ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியோன் ஜோன்சுக்கு போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் மரியோன் ஜோன்ஸ் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அப்போது அவர் ஊக்க மருந்து சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் ஊக்க மருந்து பயன்படுத்தியை மரியோன் ஜோன்ஸ், விசாரணை குழுவிடம் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. இந்நிலையில் மரியோன் ஜோன்ஸ் தன்னுடைய பதக்கங்களை அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியிடம் பதக்கங்களை ஒப்படைத்தார். ரிலே போட்டிகளில் வென்ற பதக்கங்களை ஒப்படைக்குமாறு அமெரிக்க ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.
மேலும் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு ஜோன்ஸ் வெற்றி பெற்ற பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகையையும் திருப்பி தருமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே மரியோன் ஜோன்சுக்கு தடகள போட்டியில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.