பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக லாகூரில் நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது தென் ஆப்பிரிக்க பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கராச்சியில் முதல் டெஸ்ட் நடைபெறுகிறது. கராச்சியிலிருந்துதான் இன்ஸமாம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2வது டெஸ்டிற்கு தன்னை அணியில் தேர்வு செய்வார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8813 ரன்கள் எடுத்துள்ள இன்சமாம், இன்னும் 20 ரன்கள் எடுத்தால் ஜாவேட் மியாண்டட் சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை எட்டுவார்.
இவர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் லீகில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.