ரஷ்யாவில் நவம்பர் மாதம் நடைபெறும் செஸ் உலகக் கோப்பை போட்டிகளுக்கு 6 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
உலக சாம்பியன் விஸ்வ நாதன் ஆனந்த், கிருஷ்ணன் சசிகரன் மற்றும் பென்டாலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் தங்களது உலகத் தரவரிசை நிலைகளால் தகுதி ஏற்கனவே உலகக் கோப்பை செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்த அபிஜித் குன்ட்டே மற்றும் ஜி.என். கோபால் ஆகியோரும் உலகக் கோப்பை செஸ் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற மற்றொரு வீரர் சூரிய சேகர் கங்குலி ஆவார். இவர் கடந்த மாதம் டாக்காவில் நடந்த செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் உலக கோப்பைக்கு தகுதி பெற்றார்.
மொத்தம் 128 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் உலகக் கோப்பை செஸ் தொடர் ரஷ்யாவில் வரும் நவம்பர் மாதம் 24ம் தேதி துவங்குகிறது.