ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முதல் ஆட்டத்தில் சானியா வெற்றி!

Webdunia

செவ்வாய், 2 அக்டோபர் 2007 (13:47 IST)
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்திலசானியா மிர்சா வெற்றி பெற்றார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா), ஜப்பான் வீராங்கனை அயுமி மொரிடாவுட‌ன் மோ‌தினா‌ர்.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சானியாவுக்கு, அடுத்த செட்டில் மொரிடா நெருக்கடி கொடு‌த்தா‌ர்.

இறு‌தி‌யி‌ல் சானியா 6-0, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்று ஆட்டத்தி‌ல் ஆஸ்‌ட்ரேலிய வீராங்கனை கெசேய் டெல்லாக்குட‌ன் சா‌னியா ம‌ி‌ர்சா மோது‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்